குறுந்தொகை - 21

குறுந்தொகை - 21
பாடலாசிரியர் ஓதலாந்தையார்
முல்லை திணை
கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை. ஆனால் அதை நம்ப மறுக்கிறது பெண் உள்ளம். அதனால் இயற்கையே கார்காலத்தை மாற்றிவிட்டது என உரைக்கிறாள்.

வண்டு படத் ததைந்த, கொடி இணர் இடை இடுபு,
பொன் செய், புனை இழை, கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ”கார் எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே
                     - ஓதலாந்தையார்

சொற்பொருள்:
வண்டுபட-வண்டுகள் மொய்க்க, தைந்த-செறிந்து மலர்ந்த , இடை இடுபு- தழைகளுடன் சேர்த்து கட்டிய, பொன்செய் புனை இழை- பொன்னால் செய்து அணிவது போன்ற தலை அணிகள், கதுப்பு-கூந்தல், கொன்றை கானம்-கொன்றை மரக்காடுகள், தேரன்-நம்ப மாட்டேன்


கருத்துரை:
கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை. ஆனால் அதை நம்ப மறுக்கிறது பெண் உள்ளம். அதனால் இயற்கையே கார்காலத்தை மாற்றிவிட்டது என உரைக்கிறாள்.

வண்டு வந்து அமரும் பூங்கொத்தின் இடையிடையே கட்டிய பொன் இழையால் ஆன தலை அணியைச் சேர்த்து தலையில் சூடியிருக்கும் பெண் , கார்காலம் வந்தும், அதற்கான கொன்றைப் பூ பூத்து குலுங்கி இருந்தும், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லையெனில், அவர் பொய் சொல்லமாட்டார். இன்னும் கார் காலம் வரவில்லை இது இயற்கையின் மாற்றம்.

(அந்த அளவு இயற்கையின் பருவ காலங்களைவிட தலைவன் சொற்களை நம்புகிறாள்)
Context
He parted her alone saying that he will return home in rainy season. The season came. But he did not return. Her maid worried about. At that time she (the heroine) speaks in her confidence on him and revealing her innocence.
Words
Bunches of fresh KONTRAI flowers (Image) is blossoming and the bees enjoy surrounding.
The bunch resembles the hair decoration of girls that a bunch of gold ornaments hangs in hair.
You say it is the symptom of rainy season.
Your inference is not true.
Because,
He never lies.
 A poem by OOTHAL-AANTHAIYAR

தமிழ்த்துளி Tamil-drops