குறுந்தொகை 3
இயற்றியவர் : தேவகுலத்தார்,
குறிஞ்சி திணை
தலைவி தங்கள் காதல் எத்தகையது எனத் தோழிக்கு
உணர்த்தியது
தலைவியிடம் தோழி சீண்டிப்
பார்க்க எண்ணி..அவனைப் பற்றி இழிவாகக் கூறுகிறாள். அதனை ஏற்காத தலைவி தங்கள் காதல்
எத்தகையது எனக் கூறுகிறாள். அதுவே இப்பாடல்.
நிலத்தினும் பெரிதே வானினும்
உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு
நட்பே.
அருஞ்சொற்பொருள்
நிலத்தினும்
பெரிதே -நிலத்தை விட பெரியது, வானினும் உயர்ந்தன்று – வானத்தை விட உயர்ந்தது, நீரினும் ஆரளவின்றே – நீரை விட ஆழமானது, சாரல் – பக்கமலை, கருங்கோல்
குறிஞ்சி – கரிய தண்டையுடைய குறிஞ்சி மலர், பூக் கொண்டு – மலர்களைக் கொண்டு, பெரும்
தேன் -நிறையத் தேன், இழைக்கும் – செய்யும், நாடனொடு – நாடனுடைய நட்பு , நட்பே – நட்பு
பாடலின் பொருள்
மலைச்சரிவில் கரிய தண்டையுடைய குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு நிறையத்
தேனை வண்டுகள் உற்பத்தி செய்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட நட்பு நிலத்தைவிட
பெரியது, வானைவிட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது
======================================================================================
================================================================================================================================================================================================================================== Kurunthokai 3 Poet : Thevakulathar Situation: Thalaivi’s friend was cursing the Thalaivan loud so that Thalaivan could over hear it and marry Thalaivi soon. Thalaivi retorts with this poem.