குறுந்தொகை – 30
பாடலாசிரியர் - கச்சிப்
பேட்டு நன்னாகையார்.
பாலைத்திணை -
நாம் காணும் கனவுகள்..சில
வேளைகளில் உண்மையைப் போல இருப்பதுண்டு. கண்டது கனவா..அல்லது உண்மை நிகழ்வா என ஆச்சரியப்
பட்டதுண்டு. அது போன்ற ஒரு நிகழ்வு குறுந்தொகையில் தலைவிக்கு உண்டானது.. தலைவன் தலையைப்
பிரிந்து பொருளீட்ட வெளியே சென்றுள்ளான். அவனது பிரிவால்...வாடும் தலைவி.. அவன் தன்னுடன்
இருப்பதை போல கனவு காண்கிறாள். தோழி தலைவியின் ஆற்றாமைக்கான காரணம் கேட்க தலைவி உரைக்கிறாள்.
கேட்டிசின் வாழி தோழி
யல்கற்
பொய்வ லாளன் மெய்யுறன்
மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா
மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சா அய்த்
தமியேன் மன்ற வளியேன்
யானே,
- கச்சிப் பேட்டு நன்னாகையார்.
சொற்பொருள் : தோழி - , கேட்டிசின்
- கேட்பாயாக: அல்கல்- இராக் காலத்தில், பொய்வலாளன் - பொய் கூறுதலில் வன்மை உடைய தலைவன்,
மெய் உறல் மரீஇய - என் உடம்புடன் அணைதலைப் பொருந்திய, வாய் தகை - மெய்போலும் தன்மையை
உடைய, பொய்கனா - பொய்யாகிய கனவு, மருட்ட - மயக்கத்தை உண்டாக்க, ஏற்று எழுந்து - துயிலுணர்ந்து
எழுந்து, அமளி தைவந்தனன் - தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்; வண்டுபடு குவளை மலரின்
- வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல, சாஅய் - மெலிந்து, மன்ற - நிச்சயமாக,
தமியேன் - தனித்தவளாயினேன்; யான் - அத்தகைய யான், அளியேன் - அளிக்கத் தக்கேன!் கருத்துரை
தோழி (என் ஆற்றாமை காரணத்தை) கேட்பாயாக!
பொய் கூறுவதில் வன்மை உடைய தலைவன், என் உடலை உண்மையாக அணைத்தாற்போல பொய்யாகிய கனவு
உண்டாக.. உண்மை யென எழுந்து.. தலைவன் உள்ளான் என படுக்கையைத் தடவினேன். வண்டுகள் அமர்ந்து
(தேனருந்தி சென்ற குவளை) சென்ற குவளை மலரைப் போல நான் உண்மையாகவே மெலிந்து தனித்தவளாயினேன்
.