குறுந்தொகை - 23

குறுந்தொகை - 23
பாடலாசிரியர் ஔவையார்
குறிஞ்சி திணை
தலைவனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடால்..தலைவி பிரம்மை பிடித்தது போல இருக்கிறாளாம். அவள் நிலை எப்போது சரியாகும் என நெற்குறி பார்ப்பவள் மூலம் பார்க்கிறார்களாம்.

அகவன் மகளே யகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

                   -ஒளவையார்.

(அகவல் மகள் - கட்டுவிச்சி -முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் காணும் குறி).இவளைப் பிற்காலத்தார் குறத்தி என்று கூறுவர்.


தெய்வங்களை அழைத்துப் பாடும் குறி சொல்லும் மகளே , சங்கு மணியினால் ஆன கோவையைப் போன்ற வெண்மையாகிய கூந்தலை உடைய  அகவல் மகளே!பாட்டுகளைப் பாடுவாயாக.(நீ பாடிய) தலைவனது நெடிய குன்றத்தை புகழ்ந்துபாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக (என தோழி உரைக்கிறாள்)