குறுந்தொகை 31

குறுந்தொகை 31,
ஆதிமந்தியார்,
மருதத் திணை

தலைவி சொன்னது  
( தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் ஆடும் அணங்கு. உடன் ஆடுபவனுடன் நட்பு கொண்டிருந்தேன்.இப்போது அவனுடன் ஆன; என்னோடு நட்பு பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் . அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.

பொருள்:   மள்ளர் வீரர்கள்,  குழீஇய கூடிய,  விழவி னானும் விழாவிலும்,  மகளிர் பெண்கள், தழீஇய -  தழுவும், துணங்கை  துணங்கை ஆட்டத்திலும்,  யானும் நானும்,  யாண்டுங் காணேன் அங்கு காணவில்லை,  மாண்தக் கோனை மாட்சிமையுடைய தலைவனை, யானுமோர் ஆடுகள மகளே நானும் ஓர் ஆடும் மகள்,  என்கைக் என் கை, கோடு ஈர் சங்கினால் செய்த, இலங்கு வளை விளங்குகின்ற வளையல்களை,  நெகிழ்த்த நெகிழச்செய்த, பீடுகெழு -  பெருமையுடைய,  குரிசலும் தலைவனும், ஓர் ஆடுகள மகனே ஒரு ஆடும் மகன்       
வீரர்கள் கூடி ஆடும் விழாவிலும், பெண்கள் தழுவி ஆடும் துணங்கை ஆட்டத்திலும் என்  மாட்சிமையுடைய தலைவனைக் காண முடியவில்லை. சங்கினால் செய்யப்பட என் வளையல்களை நெகிழச் செய்தவன் அவன். நான் நடனம் ஆடும் பெண். பெருமை மிகுந்த அவனும் நடனம் ஆடுவபன்.

(இப்பாடலில் துணங்கை என்பது ஒருவகைக் கூத்து.மகளிர் ஆடும் இதில் முதற்கை கொடுப்பது ஆண்கள்.இப்பாடலில் ஆடும்மகளான தலைவிக்கு முதற்கை கொடுத்த தலைவனும் ஆடும் மகன் என்பது மறைந்து நிற்கும் செய்தி)


(இப்படிப்பட்ட தலைவன் இருப்பதால்..மணத்திற்குரிய பரிசத்துடன் வேறு ஒருவர்  அறன் ஆகாது என தோழியிடம் சொல்கிறாள்)